டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கின் 4ஆவது நாளான இன்று நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் பவானி தேவியை, துனிசியா நாட்டின் வீராங்கனை நடியா பென் அஸிஸி (Nadia Ben Azizi) எதிர்கொண்டார்.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பவானி தேவி, எதிரணி வீராங்கனை நடியா பென்னை துவம்சம் செய்தார். மொத்தம் 6 நிமிடங்களே நடந்த இப்போட்டியில் பவானி தேவி 15-3 என்ற புள்ளி கணக்கில் வெற்றியை தனதாக்கினார்.