டோக்கியோ: 2020 ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. போட்டியின் 14ஆம் நாளான நேற்று (ஆக. 5) இந்தியா ஹாக்கியில் ஒரு வெண்கலமும், மல்யுத்தத்தில் வெள்ளியையும் என இரண்டு பதக்கங்களை வென்றது.
தற்போது, பதக்கப் பட்டியலில், சீனா 34 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலம் என 74 பதக்கங்களுடன் முதலிடத்திலும், அமெரிக்கா 29 தங்கம், 35 வெள்ளி, 27 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்திலும் உள்ளன.