தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்! - HOCKEY

ஒலிம்பிக் தொடரின் 12ஆம் நாளான நாளை (ஆக. 3) இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் குறித்த தொகுப்பு.

டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள்
டோக்கியோ ஒலிம்பிக் 12ஆவது நாள்

By

Published : Aug 2, 2021, 10:36 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடரில் 12ஆவது நாளான நாளை (ஆக.3) இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்கும் அரையிறுதிப்போட்டி, மகளிர் ஈட்டி எறிதல், ஆடவர் வட்டெறிதல் போன்ற போட்டிகள் முக்கிய போட்டிகளாக பார்க்கப்படுகின்றன.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி

இன்று (ஆக. 2) ஹாக்கியில் இந்திய மகளிர் அணி நிகழ்த்திய மேஜிக்கை நாளை ஆடவர் அணி நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாளைய அரையிறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

41ஆண்டுகள் கழித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்தியா, அசுர பலம் கொண்ட பெல்ஜியத்தை நாளை மோத இருக்கிறது.

சென்ற போட்டியில் தில்பிரீத் சிங், குஜ்ரந்த் சிங், ஹர்திக் சிங் ஆகியோர் கோல் அடித்து இங்கிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அன்னு ராணி - ஈட்டி எறிதல்

மகளிர் வட்டெறிதலில் கமல்பிரீத் கவுர் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்லாமல் வெளியேறியதை அடுத்து, மகளிர் ஈட்டி எறிதலில் அன்னு ராணி மேல் கவனம் குவிந்துள்ளது.

ஒலிம்பிக் தொடருக்கு தகுதிபெற 64 மீட்டர் வீசவேண்டிய நிலையில், அவர் 62.83 மீட்டரே வீசியிருந்தார். ஆனால், தரவரிசையில் முன்னணியில் இருந்ததால்தான் அவரால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற முடிந்தது. நாளை அவர் குரூப் 'ஏ' தகுதிச்சுற்றில் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

தஜிந்தர்பால் சிங் தூர் - குண்டு எறிதல்

தடகளத்தில் மற்றொரு முக்கியப் போட்டியான ஆடவர் குண்டெறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் பங்கேற்கிறார்.

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ABOUT THE AUTHOR

...view details