தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் சதீஷ்

குத்துச்சண்டையில் ஆடவருக்கான 91 கிலோ பிரிவில் விளையாடிய இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிச்சுற்றில் பகோதிர் ஜலோலோவுடன் மோதி தோற்று வெளியேறினார்.

சதீஷ்
சதீஷ்

By

Published : Aug 1, 2021, 10:27 AM IST

Updated : Aug 1, 2021, 12:41 PM IST

டோக்கியோ:91 கிலோ எடைக்கு அதிகமான குத்துச்சண்டை பிரிவில் 32 வயதான இந்திய வீரர் சதீஷ் குமார் ஜமைக்கா வீரர் ரிகாா்டோ பிரவுனை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கின் 10ஆவது நாளான இன்று (ஆகஸ்ட்1) சதீஷ் குமார், உஸ்பெகிஸ்தானின் பகோதிர் ஜலோலோவுடன் மோதினார். நடப்பு உலக மற்றும் ஆசிய சாம்பியனான பகோதிர், 0-5 என்ற கணக்கில் சதீஷ் குமாரை வீழ்த்தினார்.

குத்துச்சண்டையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த மேரி கோம், மகளிர் 51 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதியில் வெளியேறினார் சதீஷ்

இந்நிலையில் காலிறுதிக்கு முன்னேறி எதிர்ப்பார்ப்பைக் கூட்டிய சதீஷ் குமாரும் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளார். இதற்கு முன் இந்திய ஓபன் குத்துச்சண்டையின்போதும் பகோதிரிடம் சதீஷ் தோல்வியை தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எனக்கு அளிக்கப்பட்ட முடிவு மோசடியானது - மேரி கோம்

Last Updated : Aug 1, 2021, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details