டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 23) தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியின் முதல் பாதியில் முன்னிலைப் பெற்ற வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், 329 புள்ளிகளுடன் அதானு தாஸ் 31ஆவது இடத்தையும், பிரவீன் ஜாதவ் (329 புள்ளிகள்), தருண்தீப் ராய் (323 புள்ளிகள்) முறையே 30 மற்றும் 45ஆவது இடங்களையும் பிடித்தனர்.