தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம்: பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேற்றம் - மல்யுத்தம்

ஒலிம்பிக்கின் 15ஆவது நாளான இன்று (ஆக. 6) ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பஜ்ரங் புனியா
பஜ்ரங் புனியா

By

Published : Aug 6, 2021, 9:30 AM IST

டோக்கியோ: ஒலிம்பிக்கின் 15ஆவது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் ஆடவர் 50 கி.மீ. நடை பந்தயப்போட்டி, மகளிர் 20 கி.மீ. நடை பந்தயப்போட்டி, கோல்ஃப், மகளிர் ஹாக்கி, ஆடவர், மகளிர் மல்யுத்தம் உள்ளிட்டப் போட்டிகளில் பங்கேற்றனர். அதில், ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரரான பஜ்ரங் புனியா, கிர்கிஸ்தான் நாட்டின் அக்மதாலீவ் உடன் மோதினார்.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய புனியா, இறுதியில் அக்மதாலீவை வீழ்த்தினார். தற்போது அவர் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். முன்னதாக மகளிர் மல்யுத்த 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: கிரேட் பிரிட்டனிடம் இந்தியா போராடி தோல்வி

ABOUT THE AUTHOR

...view details