தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா சரண் - ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

ஆண்கள் ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

By

Published : Jul 25, 2021, 7:17 PM IST

டோக்கியோ (ஜப்பான்): ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று (ஜூலை 25) மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலியா ஆதிக்கத்தை செலுத்தியதால், இந்திய அணிக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா அசராமல் கோல் அடித்துக்கொண்டே இருந்தது.

ஆட்டம் காட்டிய ஆஸ்திரேலியா

இதில் ஆஸ்திரேலியா அணியின் டேனியல் பீல் (10ஆவது நிமிடம்), ஜெர்மி ஹேவர்ட் (21ஆவது), ஆண்ட்ரூ பிளின் ஓகில்வி (23ஆவது), ஜோசுவா பெல்ட்ஸ் (26ஆவது), பிளேக் கோவர்ஸ் (40, 42ஆவது நிமிடம்), டிம் பிராண்ட் (51ஆவது நிமிடம்) ஆகியோர் அடுக்கடுக்காக கோல் மழை பொழிந்தனர்.

இந்திய அணி சார்பில் தில்பிரீத் சிங் 34ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 - 7 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் வீழ்ந்தது.

அடுத்த போட்டி

இந்திய ஆண்கள் அணி, நேற்று (ஜூலை 24) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்தியா தனது அடுத்த போட்டியில் ஸ்பெயின் அணியை வரும் செவ்வாய் கிழமை (ஜூலை 27) அன்று சந்திக்கிறது.

இந்தியா இன்று

முன்னதாக, ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியா சார்பில் பி.வி. சிந்து, மேரி கோம், துடுப்பு படகுப்போட்டியில் அரவிந்த் சிங், அர்ஜூன் லால், டேபிள் டென்னிஸில் மனிகா பத்ரா, பாய்மரப் படகுப்போட்டியில் நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி ஆறுதல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: டோக்கியா ஒலிம்பிக்: நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் ஏமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details