தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'பிரதமரிடம் பேசியது அற்புதமான தருணம்' -  பிவி சிந்து! - பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடியுடன் பேசியது அற்புதமான தருணம் என பிவி சிந்து தெரிவித்துள்ளார்.

PV Sindhu
பிவி சிந்து

By

Published : Aug 18, 2021, 6:00 PM IST

சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் விருந்தளித்தார்.

அப்போது, பிரதமருடன் பேசிய முழு உரையாடலையும் பிவி சிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "பிரதமருடன் பேசியது அற்புதமான தருணம். அவருடன் இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டை எவ்வாறு வளர்ச்சி அடைய செய்வது என்பது குறித்து விவாதித்தேன்.

அகாடமி மற்றும் விளையாட்டு பள்ளியை விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளேன். தற்போது, போட்டிகளில் விளையாடிக்கொண்டிருப்பதால், எதிர்காலத்தில் தந்தையுடன் இணைந்து அகாடமியை நடத்தவுள்ளேன்" என பிரதமரிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதே போல், பிவி சிந்துவின் தென்கொரியப் பயிற்சியாளர் பார்க் டே-சாங்கிடம் அயோத்தி குறித்து தெரியுமா என கேள்வி கேட்ட பிரதமர் மோடி, கொரியாவுக்கும் அயோத்திக்கும் இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த முறை, தென்கொரிய அதிபரின் மனைவி அயோத்தியில் நடந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். நீங்களும் அயோத்திக்குச் செல்ல வேண்டும், அயோத்தியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். நிச்சயம் நீங்கள் பெருமைப்படுவீர்கள்" என மோடி தெரிவித்ததாக சிந்து கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கடுமையான காய்ச்சல், தங்க மகனுக்கு கரோனாவா?- மருத்துவமனையில் நீரஜ் சோப்ரா!

ABOUT THE AUTHOR

...view details