தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோளாறால் கைவிட்டுப்போன பதக்கம்; மனு பாக்கரின் சோக கதை - யஷஸ்வினி சிங்

துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா. ஆம், உலகின் இரண்டாம் நிலை வீரர் மனு பாக்கரின் துப்பாக்கியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் பதக்க வாய்ப்பை பறித்துள்ளது.

மனு பாக்கர், யஷஸ்வினி சிங்
மனு பாக்கர், யஷஸ்வினி சிங்

By

Published : Jul 25, 2021, 9:47 PM IST

டோக்கியோ (ஜப்பான்): துப்பாக்கிச் சுடுதல் உலக தரவரிசையில் முதல் நிலை வீரரான யஷஸ்வினி சிங், இரண்டாம் நிலை வீரரான மனு பாக்கர் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறாமல் ஏமாற்றமளித்துள்ளனர்.

பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 575 புள்ளிகளை பெற்று 12ஆவது இடத்தையும், 574 புள்ளிகள் பெற்று 13ஆவது இடத்தையும் முறையே மனு பாக்கர், யஷஸ்வினி சிங் பிடித்தனர்.

இந்த போட்டியின் இடையில் மனு பாக்கரின் துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு, அவரது ஆட்டத்தில் கவனச்சிதறலை ஏற்படுத்தி அவருக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சற்று நேரத்திற்கு பிறகு துப்பாக்கி சரிசெய்யப்பட்டு, மேற்கொண்டு விளையாடினார்.

அழுத்தத்தை அருமையாக கையாண்டார்

இது குறித்து மனு பாக்காரின் தந்தையும், இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவருமான ராம்கிஷன் பாக்கர் கூறுகையில், " மனு பாக்கரின் ஆட்டத்தின் இடையில் அவருடைய துப்பாக்கியின் விசை முடுக்கியில் (Trigger) கோளாறு ஏற்பட்டது.

சிறிதுநேரத்தில் அதை சீர்செய்து பின்னர் ஆட்டத்தை மனு தொடர்ந்துள்ளார். ஆனால், இந்த அழுத்தத்தைக் கடந்து சிறப்பாக விளையாடியுள்ளார்" என்றார்.

இந்தப் போட்டியில் மனு 98, 95, 94, 95 என தொடர்ச்சியாக புள்ளிகள் எடுத்தும், முதல் பத்து இடங்களுக்குள் அவரால் வர முடியவில்லை.

மனு பாக்கரின் ஆட்டம் குறித்து ட்வீட் செய்துள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து, "மனு பாக்கருக்கு என்ன நடந்தது என்பது குறித்த விவரம் இப்போதுதான் முழுமையாக அறிந்துகொண்டேன்.

ஆட்டத்தைப் புரிந்துகொள்ளுங்கள்

அவர் அழுத்தத்தில் திணறிவிட்டார் என்று கூறும் அத்தனை பேருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அவர் அழுத்தத்தில் வெகுண்டெழுந்துள்ளார் என்பதுதான் நிதர்சனம். 34 நிமிடங்களில் 575 புள்ளிகளை பெறுவது பெரும் சாதனை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில்,"இந்த துப்பாக்கி கோளாறு ஏற்படாவிட்டால் அவர் நிச்சயம் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்திருப்பார். நம்பர் வைத்து ஒரு வீரரை எடைபோடுவதை தவிருங்கள். இனிமேலாவது, வீரரின் ஆட்டத்தை புரிந்துகொள்ள முயலுங்கள்.

இந்த போட்டியில் மனுவும், யஷஸ்வினியும் கடினமாக போட்டியிட்டனர். இந்த அனுபவம் கலப்பு பிரிவில் அவர்களுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சுடுதலில் முன்னாள் உலக சாம்பியனான ஹீனா சித்து இரண்டு முறை இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை

ABOUT THE AUTHOR

...view details