தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு - ரயில்வே அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த வீராங்கனை ரேவதி வீரமணிக்கு தென்னக ரயில்வே பதவி உயர்வு வழங்கி ஊக்குவித்துள்ளது.

ரேவதி வீரமணி, tamilnadu olympian revathi
ரேவதி வீரமணி

By

Published : Sep 8, 2021, 6:24 PM IST

மதுரை: விளையாட்டுத் துறை, சாரண, சாரணியர், கலைத் துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி வழங்கப்படுவது வழக்கம்.

அதுபோல விளையாட்டுத் துறையில் (தடகளம்) சாதனைபுரிந்த மதுரையைச் சேர்ந்த வீரமணி ரேவதிக்கு மதுரை ரயில்வே கோட்டத்தில் கமர்ஷியல் கிளார்க் பணி வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் வீராங்கனைக்கு ஊக்குவிப்பு

அவர் சமீபத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் பிரிவில் பங்கேற்றதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் ரேவதிக்கு ஊழியர் நல ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதிய விகிதம் மூன்றாம் நிலையில் இருந்து ஆறாம் நிலைக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள பணி அவர் விளையாட்டுத் துறை பயிற்சிகளை மேற்கொள்ள உதவிகரமாக அமையும்.

பதவி உயர்வு பெற்ற வீரமணி ரேவதிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதுநிலைகோட்ட ஊழியர் நல அலுவலர் ச. சுதாகரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ICC Test Rankings: 5ஆவது இடத்தில் நீடிக்கும் ஹிட்-மேன்: பும்ரா முன்னேற்றம்

ABOUT THE AUTHOR

...view details