சென்னை: புதுச்சேரியில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த, பாஸ்கர் ஸ்ரீனுவாசன் என்பவர் உலக கராத்தே கூட்டமைப்பில் (WKF) இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர், தற்போது நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக்கிகல் கரோத்தே போட்டிகளுக்கான நடுவராக (REFREE) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஆசியாவின் ரெஃப்ரி கமிஷன் உறுப்பினராகவும், காமன்வெல்த் ரெஃப்ரி கமிஷன் உறுப்பினராகவும், அமீரகத்தில் இருக்கும் யுஏஇ கராத்தே கூட்டமைப்பில் ரெப்ரி கமிஷன் உறுப்பினாராகவும், தென் ஆசிய நாடுளின் ரெஃப்ரி கமிஷன் சேர்மனாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், இந்திய முன்னாள் ரெஃப்ரி கமிஷன் சேர்மனாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
16 பேரில் தமிழர் ஒருவர்
உலக கரோத்தே கூட்டமைப்பில் உள்ள ஐந்து கண்டங்களின் தலைவர்கள், சேர்மன்கள் ஆகியோரால் ஆசிய கண்டத்திலிருந்து இந்த தேர்வுக்கு பாஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார்.
மார்ச், ஏப்ரல் மாதங்களில் துருக்கி, போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்ற நடுவர் தேர்வுகள் இரண்டிலும் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒலிம்பிக் நடுவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதில், பாஸ்கர் ஸ்ரீனுவாசனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ஒலிம்பிக்கில் நடுவராக செயல்படுவது குறித்தான பயிற்சி முன்னோட்டம் ஜூன் மாதம் ப்ரான்ஸில் நடைபெற்றது.