டோக்கியோ:பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (செப். 5) நிறைவடைகிறது. இதையடுத்து, ஆடவர் பேட்மிண்டன் எஸ்எல்-4 பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
எட்டாவது வெள்ளி
07:52 September 05
பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் இந்தியாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ:பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (செப். 5) நிறைவடைகிறது. இதையடுத்து, ஆடவர் பேட்மிண்டன் எஸ்எல்-4 பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
எட்டாவது வெள்ளி
இப்போட்டியில் பிரான்ஸ் வீரர் லுகாஸ் மசூர் உடன் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சுஹாஸ் 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் லுகாஸிடம் தோல்வியுற்று, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், டோக்கியோ பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 27ஆவது இடத்தில் உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான சுஹாஸ் யாதிராஜ் கடந்த 2007ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலராக பணியைத் தொடங்கினார். இவர் தற்போது உத்தரப்பிரதேசத்தின் கௌதம புத்த நகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: சாதனைப் படைத்த ரோஹித்... சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்