டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடைகிறது. 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த போட்டி, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஓராண்டு தள்ளிப் போனது.
முதலில் பார்வையாளர்களுடன் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஜப்பானில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.
போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, "டோக்கியோ ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெற்றது ஒட்டுமொத்த உலகிற்கே நம்பிக்கை அளித்துள்ளது.