டோக்கியோ:டோக்கியா ஒலிம்பிக் போட்டியில், பி.வி. சிந்து வெள்ளி அல்லது தங்கப்பதக்கத்தைப் பெறுவார் என்று பெரும்பாலனோர் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு முடிவுகட்டியவர் தைவான் வீராங்கனை தாய் சூ என்பவர்தான். கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில், 21-18, 21-12 என்ற சேட் கணக்கில் பி.வி. சிந்துவை அவர் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை சென் யூஃபியை அவர் எதிர்கொண்டார். தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினாலும், சென் யூஃபியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். தோல்வியை தழுவிய சமயத்தில், சிந்து தனக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்ததாக உருக்கமான பதிவொன்றை தாய் சூ இட்டுள்ளார்.