டோக்கியோ ஒலிம்பிக் நேற்று நிறைவடைந்த நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் டெல்லியில் இன்று (ஆக. 9) தேதி பாராட்டு விழா நடத்துகிறது.
நிறைவு விழா முடிந்த பின் பல வீரர்கள் இன்றுதான் நாடு திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டு அரங்கில் மாலை 6.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெறும் என இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.