டோக்கியோ:மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், வில்வித்தை போட்டியில் ஆடவர் தனிநபர் இரண்டாம் தகுதிச்சுற்று போட்டி சனிக்கிழமை (ஆக. 28) நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் ராகேஷ் குமார், ஸ்யாம் சுந்தர் சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
ராகேஷ் குமார்
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகேஷ் குமார், 720க்கு 699 புள்ளிகள் வென்று ஹாங்காங்கின் கா சூயன் நங்கை (Ka Chuen Ngai) வீழ்த்தினார்.
எனினும் சுந்தர் ஏமாற்றமே அளித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த 7ஆவது ஃபாஸா பாரா வில்வித்தை உலக தரவரிசை போட்டியில் தனிநபர் பிரிவில் ராகேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அபாரம்
இந்நிலையில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஆக.31) 16 சுற்றில், மூன்றாம் நிலை வீரரான குமார், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த இரண்டு முறை ஒலிம்பியன் சாம்பியனான சீட் மரியன் மரேகாக்கை எதிர்கொள்கிறார்.
முன்னதாக, நேற்று (ஆக. 27) நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று போட்டியில் ராகேஷ் குமார் 3ஆவது இடத்தையும், ஷியாம் சுந்தர் சுவாமி 21ஆவது இடத்தையும் பிடித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கேல்ரத்னா தீபா மாலிக் ஓய்வு!