தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இராணுவ வீரனே.. பாராட்டுகள்.. ராஜ்நாத் சிங்! - ஈட்டி எறிதல்

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Neeraj Chopra performed like a true soldier
Neeraj Chopra performed like a true soldier

By

Published : Aug 7, 2021, 7:44 PM IST

டெல்லி : ஒலிம்பிக் தடகளத்தில் நாட்டின் 120 ஆண்டுகால காத்திருப்பை தங்கம் வென்று பூர்த்தி செய்தார் நீரஜ் சோப்ரா.

ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நீரஜ் சோப்ரா தங்கத்தை தனதாக்கினார். அவருக்கு பிரதமர் உள்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சுபேதார் நீரஜ் சோப்ரா தனது தங்க வெற்றி மூலம் இந்திய ராணுவத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் அவர் ஒரு உண்மையான வீரனை போல் போராடினார். தனது வெற்றியின் மூலம் அவர் இந்திய ஆயுதப் படை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா 2016 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.07 மீட்டர் ஈட்டி எறிந்து சாதனை புரிந்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். தொடர்ந்து தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, 2016ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் நியமிக்கப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக்- தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details