டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ-யிங் உடன் மோதினார்.
சில்வரையும் இழந்தார் சிந்து
16:34 July 31
பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ-யிங் உடன் மோதினார்.
சில்வரையும் இழந்தார் சிந்து
இப்போட்டியின் தொடக்கத்தில் இருந்தே சூ-யிங் ஆதிக்கம் செலுத்திவந்த நிலையில், 2-0 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்துவை வீழ்த்தினார். கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த சிந்து இந்த முறை அரையிறுதியில் தோல்வி அடைந்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதேபோல், இதன் மற்றொரு அரையிறுதி போட்டியில் சீனா வீராங்கனைகளான சென் யூஃபி, ஹி பிங்ஜியாவோ ஆகியோர் மோதினர். இதில், சென் யூஃபி 2-1 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான பிங்ஜியாவோவை வீழ்த்தினார்.
வெண்கலம் யாருக்கு
இந்நிலையில், இந்த இரு அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற பி.வி.சிந்து, பிங்ஜியாவோ உடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோத உள்ளார். தற்போது, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள டாய் சூ-யிங் கடந்த 2016 ரியோ ஒலிம்பிக்கின் ரவுண்ட் ஆஃப் 16இல் பி.வி.சிந்துவிடம் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்: காலிறுதிக்குத் தகுதிபெறுமா இந்திய மகளிர் ஹாக்கி?