டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவின் நட்சத்திரங்கள் எனக் கூறப்பட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. மேரி கோம், தீபிகா குமாரி, மணிகா பத்ரா, மனு பாக்கர், யாஷஸ்வினி சிங் தேஸ்வால் என வெவ்வேறு விளையாட்டுகளில் உலகத்தர வீராங்கனையாகத் திகழ்ந்த இந்திய மங்கைகளுக்கு டோக்கியோ கை வரப்பெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ள மீரா பாய், பி.வி. சிந்து இருவருக்கு அடுத்து, பதக்கத்தை உறுதிசெய்திருந்த லவ்லினா தான் டோக்கியோவின் சர்ப்ரைஸ் கிஃப்ட்.
நண்பகல் பயிற்சி
ஆகஸ்ட் 4ஆம் தேதியான நாளை லவ்லினா, உலக சாம்பியனான துருக்கி நாட்டைச் சேர்ந்த புஸ்னேஸ் சுர்மேனேலி உடன் மோத இருக்கிறார். நாளைய போட்டியில் அவர் வென்றால், ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
அரையிறுதி குறித்து லவ்லினாவின் பயிற்சியாளர் கூறுகையில்,"அரையிறுதிப் போட்டி நண்பகலில் நடக்க இருப்பதால், கடந்த இரு தினங்களாக நண்பகலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். லவ்லினா அனைத்து வியூகங்களையும் புரிந்துகொண்டு ஆட்டத்திற்குத் தயாராக இருக்கிறார்.
அவருடைய விளையாட்டின்மீது பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார். நிச்சயம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்" என்றார்.
லவ்லினா vs புஸ்னேஸ் சுர்மேனேலி