தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TOKYO OLYMPICS: அதிதி அசோக்குக்கு பிரதமர் மோடி பாராட்டு!

மகளிர் கோல்ஃப் போட்டியில் நான்காவது இடம்பிடித்த இந்திய வீராங்கனை அதிதி அசோக்குக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

By

Published : Aug 7, 2021, 8:40 PM IST

டெல்லி:ஒலிம்பிக் தொடரின் கோல்ஃப் மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் ப்ளோ இறுதிச்சுற்றில் இந்தியாவின் அதிதி அசோக் நான்காவது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதது சற்று மனவருதத்தை அளிப்பதாக போட்டிக்கு பின் அதிதி அசோக் தெரிவித்திருந்தார்.

தனித்துவமான பாதை

இந்நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்வீட்டில்,"டோக்கியோ ஒலிம்பிக்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துனீர்கள்.

பதக்கம் தவறிவிட்டது என்றாலும் நீங்கள் பிற இந்தியனை விட வெகு தூரம் சென்று ஒரு தனித்துவமான பாதையை அடைந்துவீட்டீர்கள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டில்" அற்புதமாக விளையாடினீர்கள், அதிதி அசோக்! இந்தியாவின் இன்னொரு மகள் தன் முத்திரையை பதித்துள்ளார். அபாராமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பதக்கம் வெல்ல முடியவில்லை - அதிதி அசோக்

ABOUT THE AUTHOR

...view details