டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக் வட்டு எறிதல் போட்டியின் எஃப்-56 பிரிவில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற பதக்கத்கிற்கான போட்டியில் இந்தியாவின் வினோத் குமார் பங்கேற்றார். இப்போட்டியில், 44.38 மீட்டர் தூரத்திற்கு வட்டை வீசி இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஐந்தாவது பதக்கம்
முன்னதாக, பாரா ஒலிம்பிக்கில் நேற்று (ஆகஸ்ட் 29) இந்தியா சார்பில் பங்கேற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதல் (எஃப்-52 பிரிவு) வீரர் வினோத் குமார் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தனர்.