தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2021, 11:48 AM IST

Updated : Aug 31, 2021, 1:23 PM IST

ETV Bharat / sports

PARALYMPIC SHOOTING: சீறினார் சிங்ராஜ்; வென்றார் வெண்கலம்!

பாரா ஒலிம்பிக் ஆடவர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் சிங்ராஜ் அடானா வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம், இந்தியா டோக்கியோவில் தனது எட்டாவது பதக்கத்தைப் பெற்றுள்ளது.

சிங்ராஜ் அடானா
சிங்ராஜ் அடானா

டோக்கியோ:மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில், மனீஷ் நர்வால் முதல் இடத்தையும், சிங்ராஜ் அடானா ஆறாவது இடத்தையும் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.

இரண்டாவது வெண்கலம்

இதையடுத்து, இறுதிப்போட்டியின் ஆரம்பத்தில் சறுக்க ஆரம்பித்த மனீஷ் நர்வால், தொடர்ந்து எலிமினேஷன் சுற்றில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

ஆனால், சிங்ராஜ் எலிமினேஷன் சுற்றில் மிரட்டலாக விளையாடி மொத்தமாக 178.1 புள்ளிகளைப் பெற்று, வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம், இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 28ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், பிரதமர் மோடி சிங்ராஜ் அடானாவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் தங்கம் வெல்வாரா தமிழ்நாட்டின் தங்கமகன்!

Last Updated : Aug 31, 2021, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details