டோக்கியோ: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டு முதல்முறையாக டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில்தான் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பாரா பேட்மிண்டனில் மட்டும் இந்தியா சார்பில் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், பிரமோத் பகத் பாரா பேட்மிண்டனில் உலக அளவில் முதல் தர வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டிகள்
இதில், நேற்று (செப்டம்பர் 1) நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் பகத், பாலக் கோலி ஆகியோர் முதல் சுற்றில் தோல்வியடைந்திருந்தனர். மேலும், நேற்று ஆடவர் குரூப் - ஏ ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் (எஸ்எல்-3) இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரமோத் பகத் இருவரும் மோதினர். இதில், பிரமோத் 3-0 என்ற செட் கணக்கில் மனோஜ் சர்காரை வீழ்த்தியிருந்தார்.
நேர் செட்டில் வெற்றி