தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விடாமல் போராடிய சுதிர்தா முகர்ஜி... அடுத்து சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள் - இந்திய வீராங்கனைகள்

டேபிள் டென்னிஸ் சர்வதேச தரவரிசை பட்டியலில் 98ஆவது இடத்தில் உள்ள  இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடன் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Paddler
இந்திய வீராங்கனைகள்

By

Published : Jul 24, 2021, 6:05 PM IST

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, ஸ்வீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை முதல் சுற்றில் எதிர்கொண்டார். இருவரிடம் இடையே போட்டி கடுமையாக இருந்தது.

இருப்பினும், முதல் ஆட்டத்திலே லிண்டா பெர்க்ஸ்ட்ராமை, 5-11,11-9,11-1,11-3,11-9,11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி

முதல் நான்கு செட்டிலும் பின்தங்கியிருந்த முகர்ஜி, பின்னர் தனது அதிரடி ஆட்டத்தைக் காட்டத் தொடங்கினார். ஐந்தாவது, ஆறாவது செட்டில் 11-3,11-9 புள்ளிகள் பெற்றதன் மூலம், வெற்றிவாகை சூடினார்.

மணிகா பத்ரா

முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த டின்-டு ஹோவை, இந்திய வீராங்கனை மணிகா பத்ரா வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சுமார் 30 நிமிடங்களில் ஆட்டத்தை முடித்து, மணிகா அசத்தியுள்ளார். இரண்டு இந்திய வீரர்கள் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்றது, இந்திய அணிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.

இதையும் படிங்க:Tokyo Olympics: வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

ABOUT THE AUTHOR

...view details