டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் இதுவரை இந்தியா 1 வெள்ளி, 1 வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளன.
மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மல்யுத்தப் போட்டிகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், மல்யுத்தத்தில் நிச்சயமாக ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையில் ஒலிம்பிக் வீரர்கள்
மேலும், பல இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், மேரி கோம், தீபிகா குமாரி உள்பட பலரும் உலகத்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ஒட்டுமொத்த இந்திய ஒலிம்பிக் குழுவை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க இருக்கிறார்.