தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விரைவில் ஒலிம்பிக் சாதனையை முறியடிப்பேன் - நீரஜ் சோப்ரா அதிரடி - NEERAJ CHOPRA

ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டர் தூரத்தை விரைவில் முறியடிப்பேன் என்று இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா

By

Published : Aug 7, 2021, 11:06 PM IST

டோக்கியோ: ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, 87.58 மீட்டர் ஈட்டி எறிந்து இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு நீரஜ் சோப்ரா காணொலி மூலமாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," இந்தாண்டு நான் பங்கேற்ற இரண்டு, மூன்று சர்வேதச போட்டித்தொடர்கள், ஒலிம்பிக் தொடரில் பெரும் உதவியாக இருந்தது.

ஒலிம்பிக் தொடரின்போது எந்த அழுத்தத்தையும் நான் உணரவில்லை, அதனால்தான் ஆட்டத்தில் என்னால் கவனத்தை செலுத்த முடிந்தது.

நான் என்னுடைய முதல் வீச்சை (த்ரோ) நம்பிக்கையுடன் வீசினேன், அது சக போட்டியாளர்களுக்கு பெரும் அழுதத்தைக் கொடுத்தது. எனது இரண்டாவது வீச்சும் நேர்த்தியாக இருந்தது.

என்னுடைய அதிகபட்ச சாதனை 88.07 மீட்டர் தூரம்தான். அதனால், ஒலிம்பிக் சாதனையான 90.57 மீட்டர் தூரத்தை முறியடிக்க நினைத்தேன். சிறப்பாக விளையாடியும் என்னால் அதை எட்ட முடியவில்லை விரைவில் 90 மீட்டர் என்ற மைல்கல்லை நான் எட்டுவேன்" என்றார்.

இதையும் படிங்க: தங்க மகன் நீரஜ் சோப்ரா தந்தை பெருமகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details