டெல்லி:இந்தியாவின் மூத்த குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், டோக்கியோ ஒலிம்பிக்கின் பெண்கள் ஒற்றையர் போட்டியில் ரவுண்ட ஆஃப் 16 சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இந்த அதிர்ச்சியைவிட பெரியது, போட்டி முடிந்து நீண்ட நேரம் அந்த போட்டியில் வெற்றி பெற்றது அவர் என்று மேரி கோம் நினைத்துக்கொண்டதுதான்.
ஓய்வே கிடையாது
இந்நிலையில் டோக்கியோவில் இருந்து டெல்லி திரும்பிய மேரி கோம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," நான் ஒய்வு பெறுவது குறித்து யோசிக்கவில்லை. எனக்கு இன்னும் விளையாடும் வயதிருக்கிறது.
பதக்கம் இல்லாமல் இந்தியா திரும்பி இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அளிக்கப்பட்ட முடிவு மோசடியானது. முதல் இரண்டு சுற்றுகளில் வென்ற நான் எப்படி அந்த சுற்றில் தோற்றிருப்பேன். நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.