தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஜூனியர் மீராபாய் சானு' - இணையத்தைக் கலக்கிய தமிழ்நாட்டு வீரரின் மகள்! - junior

மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்ற பளுதூக்கும் வீடியோவை, சிறுமி ஒருவர் மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார்

Little girl
ஜூனியர் மீராபாய் சானு

By

Published : Jul 27, 2021, 4:07 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் பெண்கள் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த மீராபாய் பல தடைகளைத் தாண்டி இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவர் பளு தூக்கிய வீடியோக்கள், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், மீராபாய் சானு பளுதூக்கும் வீடியோவை மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பளுதூக்கும் வீரர் சதிஷ் சிவலிங்கத்தின் மகள்.

ஜூனியர் மீராபாய் சானு

கையில் பவுடரை எடுத்து பூசிக்கொண்ட அச்சிறுமி, மீராபாய் போலவே பளுத்தூக்கி அவர் வென்றவுடன் கையை உயர்த்தியது போலவே உயர்த்தி அசத்தியுள்ளார்.

இந்த காணொலியை ட்விட்டரில் பகிர்ந்த சதிஷ், “ஜூனியர் மீராபாய் சானு இதுதான் இன்ஸ்பிரேஷன்” என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளி மங்கை பாராட்டு

இந்த வீடியோ பார்த்த வெள்ளி மங்கை மீராபாய் சானு, அதை பகிர்ந்து “So cute. Just love this” என்று பதிவிட்டுள்ளார். தற்போது, ஜூனியர் மீரா பாயின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் சிவலிங்கம் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வெள்ளி மங்கை மீராவுக்கு ரூ.2 கோடி, பணி உயர்வு - ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details