டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வட்டு எறிதலில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை! - வட்டு எறிதலில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை
08:28 July 31
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வட்டு எறிதலில் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஒன்பதாவது நாளான இன்று (ஜுலை.31), மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இன்றைய தகுதிச் சுற்றில் 64 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து இறுதிச்சுற்றுக்கு கமல்பிரீத் முன்னேறியுள்ள நிலையில், ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியை எதிர்நோக்கி இந்திய ரசிகர்கள் காத்துள்ளனர்.