டோக்கியோ (ஜப்பான்):நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்பார்கள்.
ஆனால், எந்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், அகதிகள், 'அகதிகள் ஒலிம்பிக் அணி' என்ற பெயரில் இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளனர்.
அகதிகள் ஒலிம்பிக் அணி எப்போது உருவாக்கப்பட்டது?
உலகெங்கும் போர் உள்ளிட்ட காரணங்களால், பலர் வெவ்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைகின்றனர். அவர்கள், ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாத சூழல் இருந்துவந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக் அகதிகள் ஒலிம்பிக் அணியை உருவாக்குவதாக ஐ.நா. சபையில், அக்டோபர் 2015ஆம் ஆண்டு அறிவித்தார். மேலும், ரியோ- 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவும் வழி செய்தார்.
ரியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணி சார்பாக கலந்துகொண்டவர்கள் அகதிகள் நெருக்கடி
"இது உலகில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் நம்பிக்கையளிக்கக் கூடியதாக இருக்கும். இதன்மூலம், அகதிகள் நெருக்கடி குறித்து உலகம் அறிந்து கொள்ளும்" என ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் இதுதொடர்பாக பேசியிருந்தார்.
இந்த முயற்சி 2016ஆம் ஆண்டு நல்ல பலனை அளித்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்த அணியை செழுமைப்படுத்தும் பணிகளை அகதிகள் நல்வாழ்வுக்காக இயங்கும் ஐ.நா. அமைப்பு மேற்கொண்டது.
வீரர்கள் தேர்வு
அகதிகளின் ஒலிம்பிக் அணிக்கான தேர்வினை இந்த அமைப்பு, ஒலிம்பிக் கமிட்டி, சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பு, டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவை இணைந்து அகதிகள் ஒலிம்பிக் அணியில் பங்குபெறுவர்களை தேர்வு செய்தது. ரியோ ஒலிம்பிக்கில் 9 வீரர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 12 போட்டிகளில் 29 வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் அகதிகள் அணி சார்பாக கலந்துகொண்டுள்ளவர்கள் அகதிகளின் குரல் கேட்கட்டும்
ஒவ்வொரு வீரர் ஒலிம்பிக்கில் வெல்லும்போது, இந்த நாட்டைச் சேர்ந்தவர், அந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற அறிவிப்பு வெளியாகும். அவ்வாறான அறிவிப்பு வெளியாகும்போது அந்த அந்த நாட்டுக்காரர்கள், தங்கள் நாட்டு வீரரை எண்ணி புளங்காகிதம் அடைவார்கள்.
ஒலிம்பிக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்திய அகதிகள் ஒலிம்பிக் அணி அதுபோல, அகதிகள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தால், அது அகதிகளின் வலிகளை, மக்களுக்கு உணரச் செய்யும்.
உலகம் முழுவதும் 8.24 கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட ஒலிம்பிக் வீரர்கள் முன்னதாக, ஒலிம்பிக் கொடியை ஏந்தி ஒலிம்பிக் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக் 3ஆவது நாள் அட்டவணை: ஏழு போட்டிகளில் இந்திய வீரர்கள்