பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24இல் தொடங்கி, தற்போது நடைபெற்றுவருகிறது. நாளையுடன் (செப்டம்பர் 5) போட்டிகள் முடிவடையவுள்ளன.
இந்நிலையில், ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியலை வீழ்த்தி, இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பிரிட்டன் வீரரை 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.