தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

TOKYO OLYMPICS: தொடர் ஓட்டப்பந்தயத்தில் சாதனையை முறியடித்த இந்திய அணி! - டாம் நோவா நிர்மல்

தமிழ்நாடு வீரர் ஆரோக்கிய ராஜிவ் பங்கேற்ற ஒலிம்பிக் 4X400 தொடர் ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்திய அணி, ஆசிய சாதனையை முறியடித்தாலும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறியுள்ளது.

Muhammed Anas Yahiya, Tom Noah Nirmal, Rajiv Arokia, Amoj Jacob
Indian 4x400m relay team

By

Published : Aug 6, 2021, 7:39 PM IST

டோக்கியோ:ஒலிம்பிக் தொடரின் தடகளப் பிரிவில் 4X400 தொடர் ஓட்டப்பந்தய தகுதிச்சுற்றுப் போட்டிகள் (ஹீட் 1,2) இன்று (ஆக.6) நடைபெற்றன.

இதில், முகமது அனஸ், டாம் நோவா நிர்மல், ஆரோக்கிய ராஜிவ்,அமோஜ் ஜேக்கப் ஆகியோர் பங்கேற்ற இந்திய அணி ஹீட் 2 பிரிவில் பங்கேற்றது.

ஒரு இடத்தில் மிஸ்ஸான வாய்ப்பு

தகுதிச்சுற்றில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதிபெறும். இந்திய அணி, 3:00.25 நேரத்தில் இலக்கை கடந்து அந்த ஹீட்டில் நான்காவது இடத்தைப் பிடித்து, ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இதனால், இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியுள்ளது.

முன்னதாக, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் பெற்ற கத்தார் அணி, 3:00.56 நேரத்தில் 4X400 இலக்கை கடந்திருந்ததுதான் ஆசிய அளவிலான சாதனையாக இருந்தது.

இந்நிலையில், இந்திய அணி தற்போது 3:00.25 கடந்து அந்த சாதனையை முறியடித்துள்ளது. தடகள வீரர் ஆரோக்கிய ராஜிவ் திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: TOKYO OLYMPICS: கண்ணீர் சிந்திய வீராங்கனைகள்; பிரதமர் ஆறுதல்

ABOUT THE AUTHOR

...view details