தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: நெதர்லாந்திடம் தோற்றது இந்தியா - இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து மகளிர் அணியிடம் தோல்வியடைந்தது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி
இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி

By

Published : Jul 24, 2021, 10:42 PM IST

Updated : Jul 25, 2021, 8:00 AM IST

டோக்கியோ (ஜப்பான்): டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஜூலை 24) நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் முதல் போட்டி என்பதால் ஆட்டம் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

இரண்டாம் பாதியில் ஆதிக்கம்

முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில், நெதர்லாந்து அணி நான்கு கோல்கள் அடித்து பெரும் முன்னிலையைப் பெற்றது. இதனால், ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

அடுத்தடுத்த போட்டிகள்

இந்திய மகளிர் அணி அடுத்து வரும் போட்டிகளை ஜெர்மனி (ஜூலை 26), பிரிட்டன் (ஜூலை 28), அயர்லாந்து (ஜூலை 30), தென்னாப்பிரிக்கா (ஜூலை 31) ஆகிய அணிகளுடன் மோதவிருக்கிறது.

இதையும் படிங்க: மீராபாய் சானு: 2016 தோல்வி முதல் 2021 வெள்ளிவரை - 'நெவர் எவர் கிவ் அப்' கதை

Last Updated : Jul 25, 2021, 8:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details