டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்கில் 54 இந்தியாவில் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கலந்துகொண்ட வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்திவருகின்றனர்.
PARALYMPICS: இந்தியாவுக்கு அடுத்த தங்கம்
16:12 August 30
டோக்கியோ: பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றார்.
அந்தவகையில் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்றார். மேலும், யோகேஷ் கத்துனியா, தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார்ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
வட்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்த வினோத் குமாரின் பதக்கம் பறிக்கப்பட்டதால் ஏழாக இருந்த இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஆறாக இருந்தது.
இந்நிலையில், ஈட்டி எறிதலில் பங்கேற்ற சுமித் அண்டில் தங்கப் பதக்கம் வென்றார். தங்கப் பதக்கம் வென்றது மட்டுமில்லாமல் 68.08 மீட்டர் தூரம் வீசி உலக சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலம் பாராலிம்பிக் 2020ல் இந்தியாவுக்கு அடுத்த தங்கம் கிடைத்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா மூலம் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்த சூழலில் தற்போது பாராலிம்பிக்கிலும் ஈட்டி எறிதலில் தங்கம் கிடைத்துள்ளது. மேலும், வினோத் குமாரின் வெண்கலம் பறிக்கப்பட்டதால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் இந்தத் தங்கத்தால் உற்சாகமடைந்துள்ளனர்.