டோக்கியோ: நடப்பு உலக சாம்பியனும், கடந்த ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவருமான பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.
ஆனால், அரையிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனைடாய் சூ-யிங் சிந்துவை வீழ்த்தி, தங்கப் பதக்கக் கனவை சிந்துவிடமிருந்து பறித்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று (ஆக.1) நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் சீன வீராங்கனையை தோற்கடித்து இந்தியாவிற்கான இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார், பி.வி.சிந்து.
இந்த வெற்றி மூலம் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் முதல் இந்திய பெண், இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
இதற்கு முன், 2008 பெய்ஜிஙில் வெண்கலமும், 2012 லண்டனில் வெள்ளியும் பெற்ற விஜேந்திர் சிங்தான் (மல்யுத்தம்) இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்ற முதல் பெருமையை பெற்றிருந்தார்.