டோக்கியோ:மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆடவர் வில்வித்தை ஒற்றையர் ரிகர்வ் பிரிவில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி இன்று (செப். 3) நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், கொரிய வீரர் கிம் மின் சூ உடன் மோதினார்.