ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொங்குகிறது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பிரேசில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நடைபெறும் தொடக்க விழாவில் தேசியக்கொடியை ஏந்திச் செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்போட்டிக்களில் பங்கேற்கும் இந்திய அணியின் முதல் குழு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்கியோவிற்கு இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக, பாரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் குழுவுடனும், அவர்களின் குடும்பத்தாரிடமும் பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று(ஆகஸ்ட்.17) கலந்துரையாடி ஊக்கமளித்தார். அப்போது, பிரதமரிடம், உங்களின் ஊக்கமும், ஒன்றிய அரசின் உதவியோடும் மீண்டும் தங்கப்பதக்கம் வெல்வேன் என மாரியப்பன் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கடுமையான காய்ச்சல், தங்க மகனுக்கு கரோனாவா?- மருத்துவமனையில் நீரஜ் சோப்ரா!