சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில், நேற்று(ஆகஸ்ட். 7) இந்திய வீரர் நீரஜ் சோப்ரா நடப்பு தொ தொடரில் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
தங்க மகன் நீரஜ் சோப்ரா - கோடி ரூபாய் பரிசளித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு, சிஎஸ்கே அணி சார்பாக ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னர், தடகளத்தில் இந்தியர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறை. இதனிடையே, நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு ரூ.6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. அத்துடன் மாநில அரசின் முதல் நிலை அரசுப் பணி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அதைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், நீரஜுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் அணியின் ட்விட்டர் பக்கத்தில், "நூற்றாண்டு கடந்து சாதனைப் படைத்த நீரஜ் சோப்ராவின் தங்கக் கைகளுக்கு தலை வணங்குகிறோம். அவரை ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் வரவேற்கக் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.