டெல்லி : ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் சோப்ராவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் வாழ்த்து வரவில்லை என்று சலசலப்பு எழுந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வரலாறு படைத்துள்ளார். அவரால் நாடு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வெல்வது எவ்வளவு அற்புதமான செயல்திறன். நீரஜ் சோப்ரா வரலாற்றை உருவாக்கியுள்ளார்” எனத் தெரவித்துள்ளார்.
இராணுவ வீரனே.. பாராட்டுகள்.. ராஜ்நாத் சிங்!
ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கட்சியின் மூத்தத் தலைவர், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ராகுல் காந்தி நீரஜ் சோப்ராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று செய்திகள் பரவின. இந்நிலையில் ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கில் தொழில்நுட்ப பிரச்சினை இருந்ததாக தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்ததாக காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க : டோக்கியோ ஒலிம்பிக்- தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் வாழ்த்து!