டோக்கியோ (ஜப்பான்):டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஆடவர் வெல்டர் வெயிட் குத்துச்சண்டையில் இன்று (ஜூலை 24) ரவுண்ட் ஆஃப் 32 சுற்று நடைபெற்றது. இதில், 63 - 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜப்பான் வீரர் ஒஹாசவாவுடன் மோதினார்.
சரணடைந்த விகாஸ்
ஒஹாசவாவை எதிர்கொள்ள இயலாமல் விகாஸ் கிருஷ்ணன் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தார். மேலும், ஜப்பான் வீரர் ஒஹாசாவ அடுத்த சுற்றான ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேறினார்.
குத்துச்சண்டை நட்சத்திர வீரர் மேரி கோம், மணிஷ் கௌசிக் ஆகியோரது போட்டிகள் நாளை (ஜூலை 25) நடைபெற உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விடாமல் போராடிய சுதிர்தா முகர்ஜி... அடுத்து சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்