டோக்கியோ: ஒலிம்பிக் தொடரின் பெண்கள் குத்துச்சண்டையில் மிடில்வெயிட் (69-75 கிலோ) எடைப்பிரிவில் ’ரவுண்ட் ஆஃப் 16’ போட்டிகள் இன்று (ஜூலை.28) நடைபெற்றது.
இந்தச் சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜீரியா வீராங்கனை இக்ராக் சாய்ப் உடன் மோதினார். இந்தப் போட்டியில், பூஜா, அல்ஜீரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இதன்மூலம், கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பூஜா ராணி அசத்தியுள்ளார்.