தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கொண்டாட்டத்திற்கான நேரம் இது - தயான் சந்த் மகன் மகிழ்ச்சி - தயான் சந்த் மகன் அசோக் குமார்

இந்திய ஹாக்கி அணியின் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட வேண்டிய நேரமிது என தயான் சந்த் மகன் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

ashok kumar
ashok kumar

By

Published : Aug 6, 2021, 6:35 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ள நிலையில், அணியின் வெற்றி குறித்து ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் மகன் அசோக் குமார் ஈடிவி பாரத் செய்திக்கு பிரத்யகப் பேட்டியளித்தார்.

அவர் பேசுகையில், "இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கான வெற்றி. வீரர்களின் உழைப்பும் மக்களின் பிரார்த்தனையும் பலன் கண்டுள்ளது.

அடிமை இந்தியாவில் ஹாக்கி விளையாடத் தொடங்கிய எனது தந்தை தயான் சந்த், சுந்திரத்திற்கு பின்னர் அதை உச்ச நிலைக்கு கொண்டுசென்றார். அந்த பொற்காலம் தற்போது திரும்பியுள்ளது.

இந்திய ஹாக்கி அணியின் வெற்றி செய்தி என்பது ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் மகிழ்ச்சியை தரும் செய்தியாக மாறியுள்ளது. இது கொண்டாட்டத்திற்கான நேரம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

இதையும் படிங்க:Tokyo Olympics 15ஆவது நாள்: இந்தியாவிற்கான முக்கிய போட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details