டோக்கியோவில் நடந்துவரும் பாரா ஒலிம்பிக்கில் 54 இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியாஏழு பதக்கங்களை வென்றுள்ளது. அந்தவகையில், காம்பவுண்ட் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்லோவாகியா வீரர் மரியன் மரெகாக்கை (Marian Marecak) எதிர்கொண்டார்.
ஆரம்பத்தில் ஜொலிக்க தவறிய ராகேஷ் 53 புள்ளிகளுடன் பின்தங்கியிருந்தார். பின்னர், சிறப்பாகச் செயல்பட்ட அவர் 140-க்கு 137 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியைத் தனதாக்கினார்.