தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஜாம்பவான் வீரர்களை வீழ்த்த வேண்டும்: ஸ்வரெவ்! - அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்

கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் ஜாம்பவான் வீரர்களான ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரை வீழ்த்தி இளைஞர்கள் பட்டம் வெல்ல வேண்டும் என இளம் வீரர் ஸ்வரெவ் பேசியுள்ளார்.

ஸ்வரெவ்

By

Published : Oct 25, 2019, 11:09 PM IST

ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோர் பல ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால் கிராண்ட்ஸ்லாம் உள்ளிட்ட முக்கிய தொடர்களில் இவர்களின் திறன் சற்று அதிகமாகவே இருக்கும். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மன் இளம் வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ், ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோர் இன்னும் சில ஆண்டுகள் நிச்சயம் டென்னிஸ் ஆடுவார்கள். தற்போதைய நிலையில் அவர்களுடன் போட்டியிடுவதா அல்லது அவர்களை பெரிய தொடர்களில் வீழ்த்துவதா என்பதே இளைஞர்களுக்கு முன் கேட்கப்படும் கேள்வி.

ஆனால் டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளை வீழ்த்த வேண்டும் என்பது சாதாரண விஷயமல்ல. அவர்கள் மூவரையும் மாஸ்டர்ஸ் உள்ளிட்ட சில தொடர்களில் வீழ்த்தியுள்ளேன். ஆனால் கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் என்றால் மூன்று பேரின் சாதனைகளும் சொல்லும். அவர்கள் யார் என... இன்னும் இளம் வீரர்கள் வெற்றிகளை பெற வேண்டும். அவர்களோடு சரிசமமாக போட்டியிடுவதற்கு தீவிர பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இளம் வீரர் ஸ்வரெவ்

ஜாம்பவான் வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் கோப்பைகளைக் கைப்பற்றி சாதிக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்றார். சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஃபெடரரை ஸ்வரெவ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆடிய ஆட்டம் என்ன..? கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்!

ABOUT THE AUTHOR

...view details