தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RolexShMasters ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஸ்வெரவ்! - Berrettini vs Zverev

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் பெரெட்டினியை வீழ்த்தி ஜெர்மன் வீரர் ஸ்வெரவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஸ்வெரவ்

By

Published : Oct 12, 2019, 11:36 PM IST

சீனாவில் நடைபெற்றுவரும் 2019ஆம் ஆண்டுக்கான ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் பெரெட்டினியை எதிர்த்து ஸ்வெரெவ் ஆடினார். இதன் முதல் செட் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஸ்வெரவ் 6-3 என முதல் செட்டை கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஸ்வெரவ்

இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட் ஆட்டத்திலும் அபாரமாக ஆடிய ஸ்வெரவ்-ன் ஆட்டத்திற்கு பெரெட்டினியால் ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இறுதியாக இரண்டாவது செட்டையும் 6-4 என ஸ்வெரெவ் கைப்பற்றி ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.

இதையும் படிக்கலாமே: ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்க குடியுரிமையை உதறிய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை

ABOUT THE AUTHOR

...view details