2018ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் சாம்பியன், 2009ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் சாம்பியன் என பல்வேறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் மகளிர் டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹெலப்.
இவர் சமீபத்தில் ஆடிய பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காவது சுற்றில் வெளியேறினார். மகளிர் தரவரிசைப் பட்டியலில் சிமோனா இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போது இவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிமோனா தனது ட்விட்டர் பக்கத்தில், ''நான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறேன். இப்போது என் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சின்ன சின்ன அறிகுறிகளில் இருந்து வேகமாக மீண்டுவருகிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு டென்னிஸ் சீசனை பிரெஞ்சு ஓபன் தொடரோடு சிமோனா முடித்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும் ரோஹித்!