விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற போட்டியில் உலகின் முன்னனி வீரரும், செர்பியாவை சேர்ந்தவருமான ஜோக்கோவீச் அமெரிக்கவின் டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார்.
செர்பியாவை சேர்ந்த ஜோக்கோவீச் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி சுமார் ஒருமணி 33நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், ஜோக்கோவீச் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்குகளில் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோக்கோவீச் 15 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதேபோல், இன்று நடைப்பெற்ற மற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த் வவ்ரிங்கா, அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவிடம் தோல்வியடைந்தார்.
போட்டியில் வெற்றிப் பெற்ற ரெய்லி ஓபெல்கா, வவ்ரிங்காவிடம் கைகுலுக்கினார்.
இவர்கள் ஆடிய இந்த போட்டியில் அமெரிக்கவின் ரெய்லி ஓபெல்கா 7-5, 3-6, 4-6, 6-4, 8-6 என்ற நேர்செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் வவ்ரிங்காவை தோற்கடித்தார்.