சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்குப் பிறகு காயம், கரோனா ஊரடங்கின் காரணமாக கிட்டத்தட்ட 13 மாதங்களாக ஃபெடரர் எந்தவொரு டென்னிஸ் தொடரிலும் பங்கேற்காமல் இருந்துவந்தார்.
இந்நிலையில், கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் கத்தார் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மீண்டும் களமிறங்கவுள்ளார். முன்னதாக ரோஜர் ஃபெடரர் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.