தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரண்டாண்டிற்கு பிறகு சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முகுருசா! - மான்டேரி ஓபன்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார்.

Watch: Muguruza wins first title in nearly two years in Dubai
Watch: Muguruza wins first title in nearly two years in Dubai

By

Published : Mar 14, 2021, 4:47 PM IST

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் நடத்தப்பட்டுவரும் துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா, சிலியின் பார்போரா கிரெஜ்கோவாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய முகுருசா 7-6 என்ற கணக்கில் போராடி முதல் செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன் மூலம் முகுருசா 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பார்போராவை வீழ்த்தி துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய முகுருசா

முன்னதாக, ஸ்பெயினின் முகுருசா கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மான்டேரி ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பின் இரண்டாண்டுகளுக்கு பிறகு அவர் வெல்லும் முதல் சர்வதேச சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யுவி, சச்சின் அதிரடி: இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details