தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு - கரோனா அச்சுறுத்தல்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக டென்னிஸ் வல்லுநர்கள் குழு (ஏடிபி) அறிவித்துள்ளது.

Watch: Indian Wells postponed due to coronavirus concerns
Watch: Indian Wells postponed due to coronavirus concerns

By

Published : Dec 30, 2020, 12:58 PM IST

1974ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மார்ச் மாதம் கலிஃபோர்னியாவில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டிற்கான இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரை வருகிற மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாகவும், வீரர்களின் பாதுகாப்பு கருதியும் இத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டென்னிஸ் வல்லுநர்கள் குழு (ஏடிபி) இன்று அறிவித்தது.

இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

இதுகுறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்படுகிறது. இத்தொடருக்கான மாற்று தேதி இந்தாண்டின் முடிவிற்குள் அறிக்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஆஸ்திரேலியன் ஓபன்: வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் காலம் கட்டாயம்!

ABOUT THE AUTHOR

...view details